சீதனம் வேண்டும், சீதனம் இன்றி திருமணம் இல்லை


*தொடர்* 0️⃣2️⃣


*வரதட்சணை தோன்றிய வரலாறு*


சீதனம் எனும் கொடுமை இந்த சமுதாயத்தில் வேரூன்றி வளர்ந்து விட்டதற்கு காரணம் பெண்களைப் ஈன்றெடுத்த பெற்றோர்களே...! 


ஆம்! ஒரு காலத்தில் சீதனம் என்ற வார்த்தையை தெரியாமல் தான் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது தங்கள் மகளைத் திருமணம் முடித்துக் கொடுக்கும் போது பணம் படைத்த சிலர் தங்களது கௌரவத்தை வெளிக்காட்டுவதற்காக, புகுந்த வீட்டிலே தன் மகள் கண்ணியமாக மதிக்கப்பட வேண்டும் என்பதற்காக, அவனை துணைவியாக ஏற்றுக் கொள்ளும் மணமகன் அவள் மீது அதிக பிரியம் உள்ளவனாக இருக்க வேண்டும் என்பதற்காக, திருமணம் முடித்து கணவன் வீட்டுக்கு செல்லும்போது அவளுக்குத் தேவையான, அவள் கணவனுக்கு தேவையான பொருட்களை கொடுத்து அனுப்பும் பழக்கத்தை ஆரம்பித்து வைத்தனர். 


ஒருவரைப் பார்த்து மற்றவர், மற்றவரை பார்த்து அடுத்தவர் என்ற இந்த பழக்கம் நாளுக்கு நாள் காட்டுத் தீ போல் மக்களுக்கு மத்தியில் பரவ ஆரம்பித்தது. அது மாத்திரமின்றி தன் மகள் கண்ணியமானவன், கௌரவமானவல், என் மகள் அடுத்தவனின் வீட்டில் போய் இருப்பதா என்ற கருவம் மேலோங்கி தன் பிள்ளைகளுக்கு தேவையான வீடுகளை கட்டிக் கொடுத்தார்கள். தேவையான பொருட்களை வாங்கி கொடுத்தார்கள். எவ்வளவு பெரிய கௌரவமான ஒரு ஆணாக இருந்தாலும் அவன் தான் கட்டி கொடுத்த,தன் மகளின் வீட்டில் வந்து இருக்க வேண்டும் என்ற தற்பெருமை படைத்தவர்களாக பெற்றோர்கள் மாத்தி விட்டார்கள். இதன் விபரீதம், முதுகெலும்பில்லாத ஆணவர்களும் இதை சாதமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.


 நாளடைவில் தன் மகள் கணவனின் வீட்டில் போய் இருப்பதை கேவலமாக கருதும் அளவுக்கு மக்கள் மாற்றப்பட்டு விட்டார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகளே... 


பணம் படைத்தவர்கள் செய்வதை பார்த்து ஏழைகளும், பின்னால் ஏற்படப் போகும் விபரீதத்தை உணராமல், இதனால் இந்த மனித சமுதாயமே இன்னலடைய போகிறது என்பதை உணராமல் தங்களால் முடிந்ததை தங்களுடைய மகளுக்கு கொடுத்து அனுப்பும் பழக்கத்தில் விழுந்தனர். இது நாளடைவில் படித்தவர்கள், படிக்காதவர்கள், செல்வந்தர்கள், ஏழைகள் என்ற பாரபட்சம் இன்றி நிர்பந்தமான வழக்கமாகவும் அவ்வாறு கொடுத்த அனுப்பாதவர்கள் கேவலம் கெட்டவர்களாகவும், கஞ்சத்தனம் உடையவர்களாகவும் மக்களால் கருதப்பட்டனர். இந்த மனநிலை வலுவடைந்து நாளடைவில் மணமகனின் குடும்பத்தார்களே நேரடியாகப் பெண் வீட்டிலும் கேட்க ஆரம்பித்தனர். இவ்வாறு வலுவடைந்த பழக்கம் இன்று சீதனமாக உருவெடுத்து திருமணத்திற்கு முன்பாகவே மணமகனின் தகுதியை வைத்து பேரம் பேசப்படும் அவல நிலைக்கு இந்த சமுதாயத்தை இழுத்து வந்து விட்டது.


தொடரும்......


தொகுப்பு By:- As sheikh Al hafil N. Muhammed Ahsan (In'aamy)


#islamic #islamlife #islamicmarriage #islamicfamily #Quran #quranlife #ProphetMuhammad 

#dowry #dowrysystem #DowryFreeMarriage #DowryCase #dowrywrapping #dowrysrilanka #dowrynintavur #சீதனம் #சீதனம்_இலங்கை #சீதனம்_நிந்தவூர் #வரதட்சணை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சீதனம் வேண்டும், சீதனம் இன்றி திருமணம் இல்லை

சீதனம் வேண்டும், சீதனம் இன்றி திருமணம் இல்லை