இடுகைகள்

ஏப்ரல், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ரமலான் நோன்பிற்கு பிறகு சிறந்த நோன்பு ஷவ்வால் 6 நோன்பு ஆகும்

 *💞 இஸ்லாத்தில் ஷவ்வால் ஆறு நோன்பு பற்றி அறிந்து கொள்ளவோம் *• தொழுகைகளில் முன் பின் சுன்னத் இருப்பது போன்று நோன்பிற்கும் சுன்னத் மற்றும் நபில் நோன்புகள் உள்ளன!* *• ஷவ்வால் 6 நோன்பிற்கும் அதிக சிறப்பு நன்மைகளும் உண்டு நாம் இயன்ற அளவுக்கு 6 நோன்பை வைக்க முயற்சி செய்ய வேண்டும்!* *•* ஆனால் இன்று அல்லாஹ் பாதுகாக்கணும் நம்முடைய சமூகத்தை சுன்னத் நபில் என்று கூறினாலே சுன்னாஹ் தானே விட்டால் என்ன குற்றமா? நபில் தானே கட்டாயம் வைக்க செய்ய வேண்டுமா என்று (நவதுபில்லாஹ்) அலட்சியம் கேட்கிறார்கள்! *• ஆனால் இதே உலக காரியமாக இருக்கட்டும் இரவு நேரம் அதிகப்படியாக வேளை செய்தால் அதற்கு தனி கூலி என்றால் இரவு முழுவதும் உறங்காமல் வேளை செய்கிறார்கள்! ஏன் என்றால் வேளை செய்தால் இவ்வளவு பணம் வரும் என்று அவர்களுக்கு தெரிகிறது அதன் மதிப்பு புரிகிறது!* *• தேர்வில் 30 அல்லது 40 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெற்று விடலாம் ஆனால் யாரும் இதோடு நிறுத்துவது கிடையாது இரவு பகல் பார்க்காமல் படித்து அதிகம் மதிப்பெண் பெற முயற்சி செய்கிறார்கள் ஏன் என்றால் இதற்கு கூலி தெரிகிறது நல்ல வேளை கிடைக்கும் அல்லது மேல் படிப்பு படிக்க ...

பெருநாள் தொழுகை

  பெருநாள் தொழுகை நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களிலும் சிறப்புத் தொழுகை இரண்டு ரக்அத்கள் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். தொழுகை நேரம் நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்களது காரியங்களில் முதல் காரியமாக தொழுகையைத் துவக்குவார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) நூல்கள்: புகாரீ 956, முஸ்லிம் 1472 ‘இன்றைய தினத்தில் நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன் பின் அறுத்துப் பலியிடுவோம். யார் இவ்வாறு செய்கின்றாரோ அவர் நமது வழிமுறையைப் பேணியவராவார்’ என்று அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்டதை நான் செவியுற்றேன். அறிவிப்பவர்: பரா (ரலி) நூல்கள்: புகாரீ 951, முஸ்லிம் 3627 இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று பெருநாள் தொழுகையைப் பகலின் ஆரம்ப நேரத்தில் தொழுவித்தார்கள். பின்னர் நாங்கள் ஜுமுஆ தொழுவதற்குச் சென்றோம். ஆனால் அவர் ஜுமுஆ தொழுகைக்கு வரவில்லை. நாங்கள் தனியாகவே தொழுதோம். இந்நிகழ்ச்சி நடக்கும் போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தாயி...

ரமலானில் அதிகம் தர்மம் செய்வோம்

இமாம் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸிற்கு விளக்கம் கூறுகிறார்கள் : *நபி (ஸல்) அவர்கள் வழங்கி கொடை எல்லா வகையான கொடைகளையும் உள்ளடக்கியது : கல்வி கற்றுக் கொடுப்பது, அல்லாஹ்வுக்காக அவனது மார்க்கத்தை மேலோங்கச் செய்வதற்காக உயிரையும் பொருளையும் தியாகம் செய்வது, அல்லாஹ்வின் அடியார்களுக்கு வழிகாட்டுவது போன்ற எல்லா அம்சங்களும் நபியவர்களிடம் இருந்தன!* *மேலும் மனித குலத்திற்கு எல்லா வழிகளிலும் நன்மை கிட்டுமாறு செய்வார்கள்! அதாவது, அறியாதவர்களுக்கு கல்விகற்பிப்பது, தேவையுடையோரின் தேவைகளை நிறைவேற்றுவது, பசித் தோருக்கு உணவழிப்பது போன்ற எல்லா வழிகளிலும் மக்களுக்குப் பயனளித்துக்கொண்டிருந்தார்கள் நபி (ஸல்) அவர்கள்!* *இப்படி அவர்கள் கொடை வழங்குவது ரமளான் மாதத்தில் பன்மடங்காகும்! காரணம், ரமளானின் காலம் ஒரு சிறந்த காலம்! அதில் கூலி இரட்டிப்பாக்கப்படும்!* (நூல் : மஜாலிஸ் ஷஹ்ரு றமளான் : 51)

ஸகாதுல் ஃபித்ர் (பெருநாள் தர்மம்) பற்றி அறிந்து கொள்ளுவோம்

• ஸகாதுல் ஃபித்ர் அல்லது ஸதகதுல் ஃபித்ர் என்பது பெருநாள் தொழுகைக்கு முன்பு தர்மம் செய்வது ஆகும்! ரமலான் இறுதியில் நிறைவேற்ற வேண்டிய முக்கியமான கடமைகளில் ஒன்று ஆகும்! • இது ஒவ்வொரு முஸ்லீம் மீதும் இந்த ஸகாதுல் ஃபித்ர் கடமையாகும்! கொடுக்கா விட்டால் குற்றம் ஏற்படும்! இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது : ரமளான் நோன்புப் பெருநாள் தர்மத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு கடமையாக்கினார்கள் (நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 1791) •ஸதக்கதுல் ஃபித்ர் உடைய சட்டங்கள் ஒன்று தான் ஆனால் மத்ஹப் சேர்ந்தவர்கள் நான்கு வகையான சட்டம் நான்கு வகையான ஸதக்கதுல் ஃபித்ர் அளவை கூறுவார்கள் இதற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் கிடையாது! 💟 ஸகாதுல் ஃபித்ர் கொடுப்பதின் நோக்கம் : • ஸகாதுல் ஃபித்ரை மூன்று நோக்கங்களுக்காக இதை அனைத்து முஸ்லீம்கள் மீது கடமை ஆகும் !* 1) நோன்பாளி வீணான காரியங்கள், பேச்சுக்களில் ஈடுபட்டதற்குப் பரிகாரமாக ஸகாதுல் ஃபித்ரை நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள்! 2) ஏழைகளும் பெருநாள் அன்று மகிழ்ச்சியுடன் கொண்டாட அவர்களுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டும் நோன்புப் பெருநாள் தர்மத்தை (ஸகாது...