சீதனம் வேண்டும், சீதனம் இன்றி திருமணம் இல்லை
*சீதனம் வேண்டும், சீதனம் இன்றி திருமணம் இல்லை* *தொடர்0️⃣4️⃣* #சீதனத்தால்_ஏற்படும்_கொடுமைகள். தலை தூக்கி, கொடிகட்டிப் பறக்கும் இந்த சீதனக்கொடுமை, இன்று சமுதாயத்தில் ஏற்படுத்தி இருக்கும் சீரழிவுகளையும் அவலங்களையும் நடுநிலை கண்ணோட்டத்தோடு சிந்திக்கும் எந்த ஒரு மனிதனும் நிச்சயமாக இதை வெறுத்தொதுக்குவான். 🔘 எவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்துக்கு முன்பு ஜாஹிலிய்யதுடைய காலத்தில் பெண் பிள்ளைகள் பிறந்தால் எவ்வாறு ஒரு அச்சம் ஏற்படுமோ, அவ்வாறு இன்று ஒரு பெண் குழந்தை பிறந்தால் பெற்றோர்களுக்கு ஒரு அச்சம் ஏற்படுகின்ற நிலைமை வந்துள்ளது. 🔘 ஒரு பெண் பிள்ளை பிறந்து விட்டால் ஒரு வயது இரண்டு வயதிலேயே அந்தப் பெண் பிள்ளைக்கான வீடு கட்டப்பட ஆரம்பிக்கின்றது. 🔘 தான் பெற்றெடுத்த பெண் மக்களை எப்படியும் மனக்கோளத்தில் காண வேண்டும் என்பதற்காக தன் மானத்தை துறந்து ஊர் ஊராக, தெருத்தெருவாக, வீடு வீடாக, ஏன் பள்ளிவாசல் பள்ளிவாசலாக கையேந்தி பிச்சை கேட்கும் பெற்றோர்கள் ஆயிரமாயிரம். 🔘 வட்டிக்கு கடன் வாங்கி, வரப்போகும் கணவனுக்கு சீதனமாக வாரிக் கொடுத்துவிட்டு, வாங்கிய கடனையும் வட்டியையும் செலுத்த...