ரமலான் நோன்பிற்கு பிறகு சிறந்த நோன்பு ஷவ்வால் 6 நோன்பு ஆகும்
*💞 இஸ்லாத்தில் ஷவ்வால் ஆறு நோன்பு பற்றி அறிந்து கொள்ளவோம்
*• தொழுகைகளில் முன் பின் சுன்னத் இருப்பது போன்று நோன்பிற்கும் சுன்னத் மற்றும் நபில் நோன்புகள் உள்ளன!*
*• ஷவ்வால் 6 நோன்பிற்கும் அதிக சிறப்பு நன்மைகளும் உண்டு நாம் இயன்ற அளவுக்கு 6 நோன்பை வைக்க முயற்சி செய்ய வேண்டும்!*
*•* ஆனால் இன்று அல்லாஹ் பாதுகாக்கணும் நம்முடைய சமூகத்தை சுன்னத் நபில் என்று கூறினாலே சுன்னாஹ் தானே விட்டால் என்ன குற்றமா? நபில் தானே கட்டாயம் வைக்க செய்ய வேண்டுமா என்று (நவதுபில்லாஹ்) அலட்சியம் கேட்கிறார்கள்!
*• ஆனால் இதே உலக காரியமாக இருக்கட்டும் இரவு நேரம் அதிகப்படியாக வேளை செய்தால் அதற்கு தனி கூலி என்றால் இரவு முழுவதும் உறங்காமல் வேளை செய்கிறார்கள்! ஏன் என்றால் வேளை செய்தால் இவ்வளவு பணம் வரும் என்று அவர்களுக்கு தெரிகிறது அதன் மதிப்பு புரிகிறது!*
*• தேர்வில் 30 அல்லது 40 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெற்று விடலாம் ஆனால் யாரும் இதோடு நிறுத்துவது கிடையாது இரவு பகல் பார்க்காமல் படித்து அதிகம் மதிப்பெண் பெற முயற்சி செய்கிறார்கள் ஏன் என்றால் இதற்கு கூலி தெரிகிறது நல்ல வேளை கிடைக்கும் அல்லது மேல் படிப்பு படிக்க முடியும் என்று!*
*• ஆனால் இதே மார்க்கம் என்றால் நன்மை என்கிறார்கள் சொர்க்கம் நரகம் என்கிறார்கள் இவை எல்லாம் பார்த்தது கிடையாது அதனால் இதை எல்லாம் பெரிதாக பொருட்படுத்துவது கிடையாது முஸ்லீம் ஆக உள்ளோம் என்ற காரணத்திற்கு நம்மில் பலர் அமல் செய்து கொண்டு உள்ளோம் ஆர்வத்துடன் செய்வது கிடையாது* (அல்லாஹ் பாதுகாத்த ஸாலிஹானவர்களை தவிர!)
*• நன்மைகளின் மதிப்பை ஒவ்வொரு மனிதரும் நிச்சயமாக மறுமையில் அறிந்து கொள்ளுவார்கள்! ஒரு நன்மையின் மதிப்பு மறுமை நாளில் தெரியும்!*
*• அப்போது நன்மைகளின் மதிப்பு கண்ணுக்கு தெரியும் அதன் மதிப்பு புரியும் ஆனால் நம்மால் எந்த அமலையும் அங்கு செய்ய முடியாது!*
*• மறுமை நாளில் நன்மை குறைந்து விட்டால் பெற்ற தாய் ஆக இருந்தாலும் ஒரு நன்மை நமக்கு கொடுக்க மாட்டார்கள் ஏன் என்றால் மறுமை நாளின் காட்சி அவ்வளவு கடினமாக இருக்கும்!*
(சூரத்துல் : அபஸா : 34 & 37)
*• நாம் அமல் செய்யும் பர்ளான தொழுகை நோன்பு ஜகாத் இவைகள் எல்லாம் முழுமையாக எந்த குறையும் இல்லாமல் செய்து உள்ளோம் என்று நம்மில் யாராலும் கூற முடியாது இவைகளின் நிலை பற்றி மறுமை நாளில் தான் நமக்கு தெரியும்!*
*•* அப்போது குறை இருந்தால் நம்மால் மீண்டும் அமல் செய்து அதை சரி செய்ய முடியாது! அதை எப்போதும் நினைவில் வைத்து கொள்ளுங்கள்!
*• நாம் செய்ய கூடிய உபரியான அமல் சுன்னத் நபில் நோன்புகள் தொழுகை ஸதகா போன்றவைகள் நமக்கு நன்மை மட்டும் பெற்று தராது மாறாக நம்முடைய பர்ளான அமல்களில் உள்ள குறைகளை பூர்த்தி செய்து அதை முழுமை படுத்தும்!*
(நூல் : சுனன் திர்மிதீ : 378)
*• 5 நேர பர்ளான தொழுகையில் குறை இருந்தால் நாம் தொழுகும் சுன்னத் நபில் தொழுகை நம்முடைய பர்ளு தொழுகையில் உள்ள குறைகளை பூர்த்தி செய்து விடும்!*
*• இதுமட்டும் அல்லாமல் சுன்னத் நபில் அமல் மூலம் நம்மால் அல்லாஹ்வின் பொறுத்தம் மற்றும் நெருக்கத்தை பெற முடியும்!*
(நூல் : ஸஹீஹ் புகாரி : 6502)
*•* அமல்களை ஆசை உடன் ஆர்வத்துடன் செய்யுங்கள் கடமை தானே என்று செய்யாதீர்கள்!
*💟 ஷவ்வால் 6 நோன்பு :*
*• இந்த நோன்பிற்கு என்று தனிப்பட்ட வழிமுறைகள் அல்லது சட்டம் எதுவும் கிடையாது நாம் வழமையாக நோன்பு வைப்பது போன்று தான்!*
*• ஸஹர் மட்டும் இஃப்த்தார் நாம் எப்படி செய்தோமோ ரமலானில் அதே தான் இந்த ஷவ்வால் நோன்பிற்கும் பின் பற்ற வேண்டும்!*
*• ரமலான் காலங்களில் ஒரு நோன்பாளி என்ன என்ன செய்ய வேண்டும் என்ன என்ன செய்ய கூடாதோ அதே தான் இந்த நோன்பிற்கும் பின் பற்ற வேண்டும்!*
*• ஷவ்வால் நோன்பின் நிய்யத் என்று குறிப்பிட்ட சொல் அல்லது துஆ எதுவும் கிடையாது சுன்னத் நோன்பு வைக்கிறேன் என்ற எண்ணம் உள்ளத்தில் இருந்தால் போதும்!*
*💟 ஷவ்வால் நோன்பு எப்போது வைக்க வேண்டும் :*
*• ஷவ்வால் 2 யில் இருந்து அந்த மாதம் முடிவதற்குள் இதற்கு இடைபட்ட நாட்களில் நோன்பு வைத்து விட வேண்டும்!*
(ஃபதாவா : அல் லஜ்னத்து தாயிமா : 10 / 391)
*💟 ஷவ்வால் ஆறு நோன்பை தொடர்ந்து வைக்க வேண்டுமா? அல்லது விட்டு விட்டு வைக்கலாமா?*
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
*ரமளான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றவர், காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார்!*
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 2159)
*• இந்த ஹதீஸ் உடைய கருத்தை பலர் தவறாக விளங்கி ரமலான் முடித்த உடனே தொடர்ச்சியாக ஷவ்வால் நோன்பு வைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் ஆனால் இது பிழையான கருத்து ஆகும்!*
*• இவர்கள் கூறுவது போன்று ரமலான் முடித்த உடன் தொடர்ச்சியாக நோன்பு வைக்க வேண்டும் என்றால் நாம் ஷவ்வால் பிறை 1 யில் இருந்து நோன்பு வைக்க வேண்டும் ஷவ்வால் 1 பெருநாள் ஆகும் பெருநாளில் நோன்பு வைத்து ஹராம் ஆகும்! இதிலயே இவர்களின் கருத்து பிழை என்பதை நாம் அறியலாம்!*
• மேலே உள்ள ஹதீஸ் விளக்கம் : *இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :*
*ஈத் பெருநாளை தொடர்ந்து ஆறு நோன்பை நாம் தொடர்ச்சியாகவும் வைக்கலாம்! அல்லது 6 நோன்பை நாம் பிரித்து ஷவ்வால் ஆரம்பம் முதல் இறுதி வரை பிரித்து விட்டு விட்டும் வைக்கலாம்!*
(நூல் : ஷரஹ் ஸஹீஹ் முஸ்லிம்)
*💟 ரமளானின் களா நோன்பை முதலில் வைக்க வேண்டுமா? அல்லது ஷவ்வாலின் ஆறு நோன்பை முதலில் வைக்க வேண்டுமா?*
*1) நாம் முதலில் ஷவ்வால் 6 நோன்பை தான் வைக்க வேண்டும் அதற்கு பின்பு நாம் ரமலானில் விட்ட களா நோன்புகளை வைக்க வேண்டும்!*
*• காரணம் : ரமளானில் விட்ட நோன்பை களா செய்வதற்கு கால வரம்பு எதுவும் கிடையாது! ஆனால் ஷவ்வால் 6 நோன்பை நோற்க்க ஷவ்வால் ஒரு மாதம் மட்டுமே அவகாசம் உள்ளது!*
(இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) : ஃபத்ஹுல் பாரி : 4 / 545)
*2) ஒருவருக்கு நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளது என்றால் அவர் விருப்பம் பட்டால் முதலில் களா நோன்புகளை வைத்து கொள்ளலாம் அதன் பின்பு கூட ஷவ்வால் உடைய 6 நோன்புகளை வைத்து கொள்ளலாம் இதுவும் சிறந்தது ஆகும்!*
*• அல்லது முதலில் ஷவ்வால் நோன்பை விட்டு பின்பு கூட களா நோன்புகளை வைத்து கொள்ளலாம்!*
*3) ஆயிஷா (ரழி) அவர்கள் களா நோன்பை ஷபான் மாதம் வரை தாமதம் செய்து உள்ளார்கள்!*
(நூல் : ஸஹீஹ் புகாரி : 1950)
*• இதற்கு இடைப்பட்ட காலங்களில் ஷவ்வால் 6 நோன்பு - அரபாஃ நோன்பு - ஆஷுரா நோன்பு போன்ற சுன்னத் ஆன நோன்புகளும் வந்து இருக்கும் ஆயிஷா (ரழி) அவர்கள் இவைகளை எல்லாம் விட்டு இருக்க மாட்டார்கள்!*
*• எனவே நாம் களா நோன்பு பிற்படுத்தி விட்டு ஷவ்வால் உடைய 6 நோன்பை வைத்து கொள்ளலாம்!*
*• நம்முடைய உடல் நிலை சூழ்நிலை இவைகளுக்கு ஏற்றால் போல் களா நோன்பை வைத்து கொள்ளலாம் அதே போன்று ஷவ்வால் உடைய 6 நோன்பையும் ஷவ்வால் உடைய மாதம் முடிவதற்குள் தொடர்ச்சியாக அல்லது விட்டு விட்டு வைத்து கொள்ளலாம்! நமது சூழ்நிலைக்கு ஏற்றால் போன்று!*
*💟 ரமலான் நோன்பை முழுமையாக வைத்தவர்கள் தான் ஷவ்வால் நோன்பை வைக்க வேண்டுமா?*
*• ரமலான் நோன்பை முழுமையாக வைத்தவர்கள் தான் ஷவ்வால் நோன்பை வைக்க வேண்டும் என்று இஸ்லாம் எந்த ஒரு நிபந்தனையும் விதிக்க வில்லை!*
*• நம்மில் பலர் நோய் பயணம் போன்று காரணங்களில் நோன்பை விட்டு இருப்போம் பெரும்பாலான பெண்கள் நிச்சயமாக ஹைலு ஏற்பட்டு நோன்பை விட்டு இருப்பார்கள்! ரமலான் முழுமையாக நோன்பு வைத்தவர்கள் தான் ஷவ்வால் நோன்பை வைக்க வேண்டும் என்றால் எந்த பெண்ணும் நோன்பு வைக்க முடியாது!*
*•* ஒரு சிலர் மார்க்க விளக்கம் இல்லாமல் இவ்வாறு கூறுவார்கள்! ஆனால் இஸ்லாம் எதுவும் நமக்கு கூறவில்லை!
*💟 ஆறு நோன்பின் சிறப்பு :*
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
*ரமளான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றவர், காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார்!*
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 2159)
*ஹதீஸ் விளக்கம் : 1) அல்லாஹ் ஒவ்வொரு நற்செயலிற்கும் அது போன்ற பத்து நன்மைகளை வழங்குகின்றான்!*
*ஒரு மாதம் ரமலான் நோன்பு என்பது 30 × 10 = 300 ஆகும்! ஷவ்வால் 6 நோன்பு : 6 × 10 = 60 ஆகும் மொத்தம் = 360 நாட்கள் அதாவது ஒரு வருடம் ஆகும்!*
*2) ஒரு வருட கால நோன்பு நேற்ற நன்மை என்றால் அந்த ஒரு வருடத்தில் அரபாஃ நோன்பு - ஆஷுரா நோன்பு - ரமலான் நோன்பு என அனைத்துமே வரும் நாம் ஷவ்வால் உடைய 6 நோன்பை வைத்தால் இவை அனைத்தின் நன்மையும் இன்ஷாஅல்லாஹ் பெற்று கொள்ள முடியும்!*
*💟 ஷவ்வால் நோன்பை முழுமையாக வைக்க முடியவில்லை என்றால் :*
*• நாம் நன்மை எதிர் பார்த்து ஷவ்வால் உடைய ஆறு நோன்பை தொடர்ச்சியாக அல்லது விட்டு விட்டு வைக்கிறோம்!*
*•* ஆனால் திடீர் சூழ்நிலை - பணிகளின் காரணமாக ஷவ்வால் நோன்பை முழுமையாக வைக்க முடியாமல் போய் விடுகிறது! இதை நாம் களா செய்ய வேண்டுமா அல்லது நமது மீது குற்றம் ஏற்படுமா என்றால் கிடையாது!
*• ஷவ்வாலின் ஆறு நோன்பு என்பது விரும்பதக்க சுன்னாவாகும் அது கடமையான வணக்கமல்ல!*
*• நாம் இயன்ற அளவுக்கு ஷவ்வால் நோன்பை வைக்க முயற்சி செய்ய வேண்டும்! நிர்பந்த சூழ்நிலை நம்மால் வைக்க முடியாமல் போய் விட்டால் நமது மீது குற்றம் கிடையாது நாம் வைத்த வரை நோன்பிற்கு கூலி கிடைக்கும்!*
*• அதே போன்று நாம் ஷவ்வால் நோன்பை முழுமையாக வைக்க முடியாமல் மார்க்கம் அனுமதித்த காரணம் இருந்தால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கூறியது படி உங்களுக்கு முழுமையான கூலி கிடைக்கும் என்று ஆதரவு வைக்கலாம் !*
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
*அடியான் ஆரோக்கியமானவனாய், ஊரிலிருக்கும் போது செய்யும் நற்செயல்களுக்கு கிடைப்பது போன்ற (அதே) நற்பலன் அவன் நோயுற்று விடும்போது அல்லது பயணத்தில் இருக்கும்போது (அவன் பாவம் எதுவும் செய்யாமலிருக்கும் வரை) அவனுக்கு எழுதப்படும்!*
(நூல் : ஸஹீஹ் புஹாரி : 2996)
*• எனவே நாம் ஷவ்வாலில் விட்ட நோன்புகளை மீண்டும் களா செய்யத் தேவையில்லை களா நோன்பு என்பது பர்ளான நோன்பை விட்டால் மட்டுமே உண்டு! சுன்னத் மற்றும் நபில் நோன்புகளுக்கு கிடையாது!*
(மஜ்மூஉ ஃபதாவா : 5 / 270)
*💟 விடுபட்ட ரமலான் நோன்பையும் ஷவ்வாலின் ஆறு நோன்பையும் சேர்த்து நிய்யத் வைத்தால் இரண்டுக்குமுரிய நன்மைகளும் சேர்ந்து கிடைக்குமா?*
*•* இன்று நம்மில் பலர் இப்படியும் சிந்திப்பது உண்டு! ஷவ்வால் நோன்பு வைத்தால் களா நோன்பு வைத்த கூலியும் சுன்னத் நோன்பு வைத்த கூலியும் ஒன்றாக கிடைக்குமா என்று!
*• ஒரு கல்லில் இரண்டு மாங்காய் போன்று ஆனால் ஃபர்ளான வணக்கங்களையும் சுன்னத்தான வணக்கங்களையும் இணைத்து செய்யமுடியாது!*
*• எவ்வாறு ஃபர்ளான தொழுகையையும் சுன்னத்தான தொழுகையையும் சேர்த்து ஒரே தொழுகையாக தொழ முடியாதோ அதைப் போல் தான் ஃபர்ளுடன் சேர்த்து எந்த உபரியான வணக்கங்களையும் செய்ய முடியாது!*
*• ஃபர்ளு என்பது வேறு, உபரியான வணக்கம் வேறு. இரண்டையும் தனித்தனியாக தான் நிறைவேற்ற வேண்டும்! அப்போது தான் அதன் நன்மைகளும் நமக்கு கிடைக்கும்!*
*💟 ஷவ்வால் முடிந்ததும் அதற்காக ஒரு பெருநாள் கொண்டாடுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா?*
*•* அல்லாஹ் பாதுகாக்கணும் இன்றும் பல ஊர்களில் ஷவ்வால் 6 நோன்பு முடிந்து விட்டால் அதை ஒரு பெருநாள் போன்று கொண்டாடுகிறார்கள்!
*• அதற்கு என்று புது ஆடை விஷேச உணவு! சிறப்பு தொழுகை என்று நவதுபில்லாஹ்! ஆனால் இவை எதுமே இஸ்லாம் நமக்கு கூறவில்லை இவை எல்லாமே மக்களே உருவாக்கி கொண்டது!*
*• இஸ்லாத்தில் கொண்டாட்டம் நாள் என்பது இரண்டு மட்டுமே ஒன்று ஈதுல் அழ்ஹா (குர்பானி வழங்கும் தியாகத் திருநாள்) மற்றொன்று ஈதுல் ஃபித்ர்! (ஈகைப் பெருநாள்)*
(நூல் : சுனன் அபுதாவுத் : 1134)
*• இந்த இரு நாட்களைத் தவிர வேறு எந்த கொண்டாடமும் இஸ்லாத்தில் கிடையாது பெருநாளும் கிடையாது!*
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
*நம்முடைய மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலை யார் புதிதாகச் செய்கிறாரோ அது (இறைவனிடம்) நிராகரிக்கப்பட்டதாகும்!*
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 3541)
ISLAMIC YOUTH WORLD
கருத்துகள்
கருத்துரையிடுக