ரமலானில் அதிகம் தர்மம் செய்வோம்
இமாம் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸிற்கு விளக்கம் கூறுகிறார்கள் :
*நபி (ஸல்) அவர்கள் வழங்கி கொடை எல்லா வகையான கொடைகளையும் உள்ளடக்கியது : கல்வி கற்றுக் கொடுப்பது, அல்லாஹ்வுக்காக அவனது மார்க்கத்தை மேலோங்கச் செய்வதற்காக உயிரையும் பொருளையும் தியாகம் செய்வது, அல்லாஹ்வின் அடியார்களுக்கு வழிகாட்டுவது போன்ற எல்லா அம்சங்களும் நபியவர்களிடம் இருந்தன!*
*மேலும் மனித குலத்திற்கு எல்லா வழிகளிலும் நன்மை கிட்டுமாறு செய்வார்கள்! அதாவது, அறியாதவர்களுக்கு கல்விகற்பிப்பது, தேவையுடையோரின் தேவைகளை நிறைவேற்றுவது, பசித் தோருக்கு உணவழிப்பது போன்ற எல்லா வழிகளிலும் மக்களுக்குப் பயனளித்துக்கொண்டிருந்தார்கள் நபி (ஸல்) அவர்கள்!*
*இப்படி அவர்கள் கொடை வழங்குவது ரமளான் மாதத்தில் பன்மடங்காகும்! காரணம், ரமளானின் காலம் ஒரு சிறந்த காலம்! அதில் கூலி இரட்டிப்பாக்கப்படும்!*
(நூல் : மஜாலிஸ் ஷஹ்ரு றமளான் : 51)
கருத்துகள்
கருத்துரையிடுக