சீதனம் வேண்டும் சீதனம் இன்றி திருமணம் இல்லை
*சீதனம் வேண்டும் சீதனம் இன்றி திருமணம் இல்லை*
⭕⭕⭕ *என் அன்பின் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளிடம் சிறிய வேண்டுகோள்* ⭕⭕⭕
*_நீங்கள் சீதனக்கொடுமையால் பாதிக்கப்பட்டவரா(male or female) சீதனத்தை ஒழிக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டவரா?_*
*_உமது சீதனம் பற்றிய உண்மை சம்பவம்,சீதனத்தால் நீர் எதிர் கொண்ட கொடுமைகள், பிரச்சனைகள் மற்றும் ஆக்கங்கள், கட்டுரைகளை +94752549673 என்ற வாட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்ப முடியும்,அதை மக்கள் படிப்பினைக்காக எமது முகநூல் பக்கத்தில் பகிரப்படும். இதில் வரும் சம்மவங்களில் உமது சொந்த ஊர்,பெயர் பகிரப்படமாட்டாது. அமானிதம் பாதுகாக்கப்படும். நடந்த சம்பவம் மாத்திரம் பகிரப்படும்_*
*_சீதனக்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் சம்பவத்தை உலகறியச்செய்வோம். சீதனக்கொடுமையை ஒழிப்போம்._*
*தொடர்* 0️⃣5️⃣
*மணமகனின் பெற்றோர் கவனத்திற்கு!*
உங்கள் மகனை பெற்றதும், வளர்த்து வாலிபனாக்கியதும், படிக்க வைத்து பட்டதாரியாக்கியதும், அல்குர்ஆனை சுமந்த ஒரு ஹாபில் ஒரு ஆலிமாக உருவாக்கியதும், தொழிலை கற்றுக் கொடுத்து உழைப்பாளியாக்கியதும், திருமணச் சந்தையிலே விலை போவதற்குத்தானா❓❓
ஆண் மகனை பெற்றெடுத்து விட்டோம் என்ற தைரியத்திலே பல இலட்ச ரூபாய்களும், பல நூறு பவுன்களும் கோடான கோடி சொத்துடைய வீடுகளும் வரதட்சனையாகவும், படுக்கும் கட்டில் முதல் தண்ணீர் குடிக்கும் குவளை வரை சீராகவும் தர வேண்டும் என்று மணமகளின் பெற்றோரிடத்தில் வாய் கூசாமல் கேட்கின்றீர்களே, ஏன் ❓ இல்லறத்தில் இன்பம் காண போவது பெண் மட்டும் தானா? உங்கள் மகனும் இல்லையா? இன்னும் சொல்லப் போனால் இல்லறத்தில் குடும்ப ரீதியான அதிகமான பொறுப்புக்களை சுமக்க போகிறவள் பெண் இல்லையா? உங்கள் குடும்பத்தில் ஒருவராகி உங்கள் குடும்பத்தின் பொறுப்புகளை சுமந்து, உங்கள் சுக துக்கத்தில் பங்கெடுக்க போகும் பெண்ணிடமே பணம் கேட்பது மனிதாபிமான ஓர் செயலா?
ஏன் இவ்வாறு வாங்குகிறீர்கள்? என்ற கேள்விக்கு அதிகமான பெற்றோர்கள் மகனுடைய நல்வாழ்க்கைக்குத்தான் வாங்குகின்றோம் எங்களுக்கு எந்த தேவையும் இல்லை என்ற பதிலை கூற கேட்கின்றோம். இன்னும் சொல்வதாக இருந்தால் அந்த வீட்டில் சொகுசாக வாழ்வது உங்கள் பெண்மணிகள் தானே என்று அந்தப் பெண்களை சாட்டாக வைத்து சீதனப் பிச்சை வாங்குகின்றார்கள், சாட்டுப்போக்கு செல்கின்றார்கள்.
கணவனின் வீட்டிலிருந்து பெண்ணுடைய தாயை சந்திக்க போய் அங்கு தங்குவதாக இருந்தால், அந்தப் பெண்ணிற்கும் ஒரு வீடு தேவையே என்று சிலர் கேவலமாக சீதனி பிச்சை கேட்கின்றார்கள். அவள் கணவனுடைய பொறுப்பில் இருக்கின்றாள் கணவனுடைய வீட்டில் இருப்பால் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்களா?
பிறரை கஷ்டப்படுத்தி தான் உங்கள் மகனுக்கு நல் வாழ்க்கை அமைத்து தர வேண்டுமா? உங்களிடம் சம்பந்தம் பேசும் மணமகளின் பெற்றோர்களை கடனாளிகளாக்கி அவர்களின் பொருளாதாரத்தை சீர்குலைத்துத்தான் உங்கள் மகனுக்கு நல்வாழ்க்கை அமைத்து தர வேண்டுமா? அவர்களுடைய உள்ளம் எவ்வளவு கஷ்டப்படும் கவலைப்படும் என்பதை மறந்து விட்டீர்களா?
"மகனின் நல்வாழ்கைக்குத்தான் வாங்குகிறோம்", "மருமகளின் நல்வாழ்க்கைக்குத்தான் வாங்குகின்றோம்" என்று பதில் கூறும் பெற்றோர்களே! மணமகளின் பெற்றோரிடத்தில் விலை போகும் உங்கள் மகனுக்கு மாமனார் மாமியார் இடத்திலோ, மணமகளின் சகோதர சகோதரியிடத்திலோ மதிப்பிருக்குமா? நம்மை கடனாளியாக்கி விட்டு வந்த மருமகன் தானே என்று உள்ளத்தால் உதாசீனம் செய்ய மாட்டார்களா? இத்தோடு மட்டுமா? பணத்திற்கும், வீட்டிற்கம்,காணிக்கும், நகைக்கு விலை போய் விட்டாயே என்று நண்பர்கள் எள்ளி மாட்டார்களா?
இவ்வாறு மணமகளின் குடும்பத்தாரிடமும் நண்பர்களின் முன்னிலையிலும் உங்கள் மகனின் கண்ணியத்தை இழக்கச் செய்வது தான் உங்கள் மகனுக்கு நீங்கள் அமைத்துத் தரும் நல்வாழ்க்கையா? ஒரு ஆண் என்பது தலைநிமிர்ந்து கண்ணியத்துடன் வாழ்வது தானே! ஆனால், நீங்கள் வாங்கும் சீதனத்தால் உங்கள் மகனின் கண்ணியம் குலைக்கப்படுகிறது! "தீமைக்குத் துணைப் போய்விட்டாயே!" என்று நாளை மறுமையில் அல்லாஹ் கேள்வி கேட்கும்போது தலை குனிந்து குற்றவாளியாக உங்கள் மகன் நிற்கும் நிலை உண்டாகாதா? அழிந்து போகும் பொருட்களுக்காக அழியா மறுமையிலும் உங்கள் மகனை அவல நிலைக்கு உள்ளாக்குவது தான் நீங்கள் அமைத்து தரும் நல்வாழ்க்கையா? சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
*தொடரும்*
*தொகுப்பு:- Al hafil moulavi N.M.Ahsan AH In'aamy*
கருத்துகள்
கருத்துரையிடுக